உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை (மே 1) நடைபெற உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு அதற்கான பணிகளில் கோயில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகளைக் கடந்தும் அழகுறக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்தி புறப்பாடு இன்று ஏப்ரல் 30 தேதியும், நாளை மே 1ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், பிறகு சுப்பிரமணியர், அம்மனுடன் தியாகராஜர் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியாக ராஜ வீதிகளில் வலம் வருவார்கள்.
தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தும் செல்லும் வகையிலும் பக்தர்கள் வழிபட ஏதுவாகவும் 14 இடங்களில் தேரை நிறுத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கிச்சன் கீர்த்தனா: தோசைக்குத் தனியாக மாவு அரைக்க வேண்டுமா?
விவசாயிகள் இணையதளம் மூலம் பயன்பெறுவது எப்படி?