கிச்சன் கீர்த்தனா : தஞ்சாவூர் அசோகா அல்வா
காவிரிக்கரையில் உள்ள திருவையாற்றில் செய்யப்படுகிற அசோகா அல்வாவின் ருசியையும் மணத்தையும் அதைச் சாப்பிட்டவர்களால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட அல்வாவை நீங்களும் செய்து உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை
பாசிப்பருப்பு – 200 கிராம்
கோதுமை மாவு – 200 கிராம்
மைதா மாவு – 50 கிராம்
நெய் – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
முந்திரி – 25 கிராம்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – 50 கிராம்
ஃபுட் கலர் (ஆரஞ்சு) – ஒரு டீஸ்பூன்
பொடித்த ஏலக்காய் – கால் டீஸ்பூன்
எப்படி செய்வது
பாசிப்பருப்பை வேகவைக்கவும். கடாயில் கொஞ்சம் நெய் சேர்த்து, உருகியதும் கோதுமை மாவு, மைதா மாவை மண் பதத்துக்கு (உதிர் உதிராக வரும் பதத்துக்கு) வரும் வரை வதக்கவும். மாவில் பச்சை வாசனை போனதும் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். கிளறும்போது சிறிது சிறிதாக நெய் ஊற்றிக்கொண்டே இருக்கவும். கலவை சுருண்டு அல்வா பதத்துக்கு வந்ததும் ஃபுட் கலர், பொடித்த ஏலக்காய் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் கிஸ்மிஸ், முந்திரியை வறுத்து, அல்வாவில் சேர்த்துக் கிளறி இறக்கி, பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் வெஜ் கைமா
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் சட்னி