தமிழகத்தில் மின் நுகர்வு புதிய உச்சம்: தங்கம் தென்னரசு தகவல்!

Published On:

| By Selvam

தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கியுள்ளதால், மக்களிடையே மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக  430.13 மில்லியன் யூனிட் அளவு மின்சார நுகர்வு அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை நேற்று எட்டி இருக்கிறது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு இன்று மின்சார நுகர்வு இருந்திருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் சிறப்பான வழிகாட்டுதலில், தொலைநோக்குப் பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் என நமது அரசின் சீரிய முயற்சியின் காரணமாக, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

தொழில் துறையினர், வணிகர்கள், விவசாயப் பெருமக்கள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில் மின் விநியோகம் சீராக நடந்து வருகிறது. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“செந்தில் பாலாஜிக்கு ஆயுள் முழுவதும் சிறை தான்”: கரூரில் எடப்பாடி காட்டம்!

காமெடி சேனல்ல அரசியல் பேட்டி: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel