தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 21) நீர்நிலைகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அமாவாசை நாள் என்பது வழிபாடுகளுக்கு உகந்த காலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து நீர் நிலைகள் இருக்கக்கூடிய பகுதிகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது வழக்கம்.

அந்தவகையில் இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
கடலில் நீராடிய பின்னர் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர். இதனால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க தண்ணீர் இறைத்து வழிபாடு நடத்தினர்.
இதனை போல, பவானி கூடுதுறை மற்றும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர்.
செல்வம்
நடிகையிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் சஸ்பெண்ட்!