தென்காசி காதல் திருமண வழக்கில் இளம்பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைக்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் மேலும் 2 நாள் காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், நான் தென்காசி மாவட்டத்தில் வசித்து வருகிறேன் மேலும் குருத்திகா என்ற பெண்ணை காதலித்து நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.
இந்நிலையில் குருத்திகாவின் பெற்றோர்கள் அவரை கடத்திச் சென்று விட்டனர். எனவே குருத்திகாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் குருத்திக்கா தென்காசியில் காப்பக்கத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி அவரிடம் வாக்குமூலம் பெற்று தென்காசி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
தென்காசி நீதிமன்றத்தில் குருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தென்காசி காவல்துறையினர் நேற்று தாக்கல் செய்தனர்.
குருத்திகா உறவினர்கள் தரப்பில் குருத்திகாவை அழைத்துச் செல்வதாக மனு செய்யவும் அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்ய வேண்டும் இளம் பெண்ணின் பாதுகாப்பு மிக முக்கியம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
குருத்திகாவின் அப்பா வழி தாத்த சிவாஜி பட்டேல் குருத்திகாவை தங்களது பாதுகாப்பில் அனுப்ப உத்தரவிட வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்தார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குருத்திக்காவை தாத்தா வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
குறிப்பாக வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் காரணத்தினாலும் வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவாக இருக்கும் சூழ்நிலையில் குருத்திகா பட்டேலை அவரது தாத்தா வசம் அனுப்பினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் காவல்துறை தரப்பில் இதனை எழுத்து பூர்வமாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
எனவே மேலும் இரண்டு நாள் குருத்திகா காப்பகத்தில் இருக்கட்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கலை.ரா
நில அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!