Tender for construction of AIIMS Madurai

மதுரை எய்ம்ஸ் கட்ட டெண்டர்!

தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்னும் அங்கு கட்டடம் கட்டப்படவில்லை.

இதனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்ததோடு கண்டனமும் தெரிவித்தன,

‘எய்ம்ஸ்’ என்று எழுதிய ஒற்றை செங்கலை வைத்து 2021ல் பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி.டி.ஆர் பாலு கேள்வி எழுப்பியிருந்தார்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய டி.ஆர்.பாலு, “15 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறீர்கள். அதில் 2000 கோடி ரூபாய் ஏன் எய்ம்ஸுக்கு ஒதுக்க முடியவில்லை” என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது.

மருத்துவமனையை கட்டுவதற்கு தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 33 மாதங்களுக்குள் கட்டுமானத்தை முடிக்க வேண்டும் என்று அந்த டெண்டர் அறிவிப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 2026க்குள் எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியா

நடிகர் சசிகுமார் மீது எழுத்தாளர் குற்றச்சாட்டு!

இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தகவல்!

சமூக நீதி காத்த தகைசால் தமிழர்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *