தூத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து சாலையோரத்தில் இறங்கி விபத்துக்குள்ளானதில் 50 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 10) இரண்டாவது நாளாக சிஐடியு, அண்ணா உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 33 பேருந்துகளை தொமுச மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கி வருகிறார்கள்.
இந்தநிலையில், விளாத்திக்குளத்தில் இருந்து பேரிலோவன்பட்டி செல்லக்கூடிய அரசு பேருந்தை இன்று தற்காலிக ஓட்டுநர் சுப்பிரமணியன் இயக்கியுள்ளார்.
சிங்கிலிப்பேடி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, சாலையோர பள்ளத்தில் கீழிறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50 பள்ளி மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அந்த ஊர் மக்கள் மீட்டு பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய பேருந்தை மீட்டு விளாத்திக்குளம் பணிமனைக்கு எடுத்து சென்றனர். தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கமா? – செளந்தரராஜன் பதில்!
பஸ் ஸ்டிரைக் விவகாரத்தில் பிடிவாதம் ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி!