கோயில் திருவிழா – எந்த சாதிக்கும் உரிமையில்லை : நீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Kavi

 Temple festival no caste has the right

கோயில் திருவிழாவை தங்கள் தலைமையில் தான் நடத்த வேண்டும் என்று எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. Temple festival no caste has the right

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளையில்  மகாமாரியம்மன் கோவில்  உள்ளது.  இந்த கோயிலில் மாசி திருவிழா நடத்த கோரி ஈரோட்டைச் சேர்ந்த பாரத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு   நீதிபதி பரத சக்கரவர்த்தி  முன் இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் சார்பில், ‘குறிப்பிட்ட சாதியினர் தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதால், அறநிலையத் துறை தரப்பில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால் அறநிலையத் துறையே விழாவை நடத்தும் என முடிவெடுக்கப்பட்டது.   ஆண்டுதோறும் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டுதான் திருவிழா நடக்கிறது’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி பரத சக்ரவர்த்தி,  சாதி என்பது மதமல்ல என ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது என சுட்டிக்காட்டினார். 

திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உண்டு. அதை மற்ற பிரிவினர் தடுக்க கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதி,  ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை. அறநிலையத் துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். 

கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்க கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும். தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தார். Temple festival no caste has the right

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share