தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Temperatures will rise again
மார்ச் மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதற்கு இதமாக கடந்த இரு நாட்களாக மிதமான மழை பெய்தது.
இந்தநிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தெற்கு கேரளா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
15-03-2025 மற்றும் 16-03-2025 ஆகிய இரு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
17-03-2025 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை Temperatures will rise again
13-03-2025 மற்றும் 14-03-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3°
செல்சியஸ் உயரக்கூடும்.
15-03-2025 முதல் 17-03-2025 வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான
வாய்ப்பு குறைவு” என்று கூறியுள்ளது. Temperatures will rise again