மாணவர்கள் சரியாகப் படிக்காவிட்டால், ஆசிரியர்களின் சம்பளம் கட்!

தமிழகம்

மாணவர்கள் சரியாகப் படிக்காவிட்டால் ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் அறிவித்துள்ளது அம்மாநில ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்த பள்ளிக்கல்வித்துறை தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிரா மிகவும் பின்தங்கியிருப்பதும் 2020-21ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருந்த மகாராஷ்டிரா, இப்போது எட்டாவது இடத்துக்குச் சென்றுவிட்டதாகவும் அறிவித்திருந்தது. இதன் காரணமாக கல்வித்தரத்தை உயர்த்த மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், “ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளவும், மாணவர்கள் சரியாகப் பள்ளிக்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும் அரசுப் பள்ளிகளில் கேமரா பொருத்தப்படவிருக்கிறது.

மேலும், மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது பற்றி ஆசிரியர்களுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி கொடுக்கப்படும். அப்படியும் சரியாக பாடம் நடத்த தவறும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 50 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். கூடவே அத்தகைய ஆசிரியர்களுக்கு மேலும் ஆறு மாதங்கள் பயிற்சி கொடுக்கப்படும். அவர்கள் பாடம் நடத்துவதில் முன்னேற்றம் அடையவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லையெனில் அதற்கும் ஆசிரியர்கள் சம்பளம் பிடிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் இடங்களை புதிய ஆசிரியர்களைக் கொண்டு நியமிக்காமல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சம்பளத்திலும் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘இப்படி பேசும் அரசியல்வாதிகள் மக்கள் பணி செய்யலைன்னா என்ன செய்வது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராஜ்

கடலில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்… நிதி வசூலிக்க ஸ்டாலின் நடத்திய ஆலோசனை!

முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: அண்ணாமலை எச்சரிக்கை!

+1
4
+1
7
+1
3
+1
5
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *