பள்ளி கல்லூரி ஆசிரியர் நியமன தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013 முதல் ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த வெயிட்டெஜ் முறையை பின்பற்றுவதில் குழப்பம் இருப்பதாகவும், அனைவருக்கும் பணி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தது.
இந்தநிலையில், பள்ளி கல்லூரி ஆசிரியர் நியமன தேர்வில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவிடம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போன்று ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகள், கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் மட்டுமின்றி பொறியியல், சட்டம், அரசு பல்கலைக்கழகங்களுக்கான பேராசிரியர்களும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தில் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐஏஎஸ் அந்தஸ்தில் அதிகாரி ஒருவரும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அந்தஸ்தில் இரண்டு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள்.
போட்டி தேர்வுகளுக்காக டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் 60 சதவிகித மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மீதமுள்ள 40 சதவிகித மதிப்பெண்கள் வெயிட்டேஜ் முறையை பின்பற்றி கணக்கிடப்படும்.
டெட் தேர்வில் எடுக்கப்பட்ட 60 மதிப்பெண்களுடன், 12-ம் வகுப்பிலிருந்து 15 மதிப்பெண்களும், டிப்ளமோவிலிருந்து 25 மதிப்பெண்களும் சேர்த்து, வெயிட்டேஜ் முறையானது கணக்கிடப்படும்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!