கிருஷ்ணகிரியில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக பள்ளி மாணவியை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நடந்துள்ளது. Teachers arrested for pregnating girl in Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் படித்து வருகிறார்.
இவர் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வராததால், தலைமையாசிரியர் ஏன் அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை என்று சக மாணவ – மாணவிகளிடம் விசாரித்துள்ளார்.
ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால், தலைமை ஆசிரியர் அந்த மாணவியை தேடி வீட்டுக்கே சென்றார்.
அங்கு சிறுமியின் தாயாரிடம், ஏன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் ஒரு மாதமாக வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க, ’எனது மகள் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் கரு கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளோம்’ என்ற கூறியுள்ளார்.
இப்படியொரு பதிலை சற்றும் எதிர்பாராத தலைமையாசிரியர், சிறுமியிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார்,
சிறுமி பகீர் தகவல் Teachers arrested for pregnating girl in Krishnagirigirl in Krishnagiri

அப்போது தனது கர்ப்பத்திற்கு தான் படித்த பள்ளி ஆசிரியர்களான சிவம்பட்டி அருகே உள்ள எம்.பள்ளத்தூரை சேர்ந்த ஆறுமுகம் (48), பாரூர் அருகே உள்ள அனுமன்கோவில் பள்ளம் பகுதியை சேர்ந்த சின்னசாமி (57), வேலம்பட்டி அருகே உள்ள எருமாம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (37), ஆகிய 3 பேரும் தான் காரணம் என்றும் அவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி கூறியதை கேட்டு தலைமை ஆசிரியர் மேலும் அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.
அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்தார்.
இந்தபுகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்து விசாரித்தனர்.
பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில், அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி என்.சி.சி. பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் பயின்ற 8ஆம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கி அனைத்து இடத்திலும் பாதுகாப்பே இல்லை என்பதை உணர்த்துகிறது. Teachers arrested for pregnating girl in Krishnagiri