ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியீடு!
2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையைத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி மாதம் கலை, அறிவியல் மற்றும் கல்வியில் துறைகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகும் என்றும், அதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
6553 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மே மாதம் நடைபெறும்.
3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். தேர்வு வரும் ஜுன் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஜுன் மாதம் வெளியிடப்படும். இதன்மூலம் , 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் I & II குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவரும். அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
எடப்பாடிக்கு மோடியின் இரண்டாவது கிரீன் சிக்னல்!
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?