சென்னையில் உள்ள சாலைகளை நாம் உற்று கவனித்தால், ஒரு விஷயம் நமக்கு புலப்படும்.
அதிக எண்ணிக்கையில் காணப்படும் டாக்ஸிகள் மற்றும் குறைந்து வரும் தனியார் டாக்ஸிகள்தான் அது.
கடந்த 2023 ஆண்டு சென்னையில் கார்கள் விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கு அதிகரித்து வரும் வரிகள், கார்கள் நிறுத்துவதற்கான இடப் பற்றாக்குறை, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்கள் ஆகிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
“அதிகரித்துள்ள சாலை வரி இதற்கு முக்கிய காரணம்” என்கிறார் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவரான ராஜவேல்.
தமிழ்நாட்டில் 2023ம் வருடம் நவம்பர் 9 ஆம் தேதி வாகனங்களுக்கான சாலை வரிகள் உயர்த்தப்பட்டன. அதன்படி 5 லட்சம் வரை விலையுள்ள கார்களுக்கு 12%, 5 முதல் 10 லட்சம் விலை மதிப்புள்ள கார்களுக்கு 13 %, 10 முதல் 20 லட்சம் விலை மதிப்புள்ள கார்களுக்கு 18 % மற்றும் 20 லட்சத்திற்கு மேல் விலையுள்ள கார்களுக்கு 20% சாலை வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சென்னை மக்கள் கார்கள் வாங்குவதற்கு பதிலாக டாக்ஸியில் செல்வதை விரும்புகிறார்கள். மேலும் ஐ.டி. உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு டாக்ஸி வசதிகள் வழங்குவதால், தனியார் கார்களின் விற்பனை குறைந்து, டாக்ஸிகள் விற்பனை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஃபாஸ்ட் டிராக்கின் நிர்வாக இயக்குநர் ரெட்சன் அம்பிகாபதி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் ” கொரோனா காலத்தில் வீழ்ந்த டாக்ஸி சேவைகள் தற்போது மீண்டு வருகின்றன. ஒவ்வொரு காலாண்டுகளுக்கும் நாங்கள் 150-200 புதிய கார்களை எங்கள் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறோம்.” என்றார்.
தரவுகளின் படி பார்த்தால் 2022ஆம் ஆண்டு சென்னையில் 78,615 கார்கள் விற்கப்பட்டது. அதே 2023ஆம் ஆண்டில் 66,565 கார்கள் தான் விற்கப்பட்டது.
டாக்ஸி விற்பனையை கவனித்தால், 2023 ஆண்டு சென்னையில் 3986 டாக்ஸிகள் விற்கப்பட்டன, 2024 ஆண்டில் இதுவரை 8158 டாக்ஸிகள் விற்கப்பட்டுள்ளது.
சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் விற்கப்பட்டுள்ள கார்கள் மற்றும் டாக்ஸிகளின் எண்ணிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலின் மூலம் டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்பது நமக்கு தெளிவாக புரிகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தத்தளித்த தமிழகம்… படம் பார்த்த மோடி: மக்களவையில் விளாசிய மாணிக்கம் தாகூர்