’வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகவரித் துறை விதித்த விற்பனை வரியை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருப்பூர் ஸ்ரீஅன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வரி வருவாய் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வதால்தான் நாடு மிகப்பெரிய பிரச்னைகளை சந்திக்கிறது” என்று தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், “தங்களது உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் நாட்டில் காளான்களைப்போல அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தகுந்த அபராதம் விதிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, “சில ஹோட்டல் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தரமான உணவு வழங்காமல் பொதுமக்களுக்கு உடல்ரீதியான கோளாறுகளை ஏற்படுத்துகின்றன” வேதனை தெரிவித்த அவர்கள், திருப்பூர் ஸ்ரீஅன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஜெ.பிரகாஷ்
துனிஷா தற்கொலை: வெளியான காதலனின் ரகசியம்
!ரேஷன் கடை: நாளை முதல் புதிய முறை அமல்!