டாடா எலக்ட்ரானிக்ஸ் : 12,082 கோடி முதலீடு 40,500 பேருக்கு வேலை!

Published On:

| By Kavi

கிருஷ்ணகிரியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை ரூ.12,082 கோடி மதிப்பில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் விரிவாக்கம் செய்யவுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (ஜனவரி 7) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டுள்ளார்.

அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் புதிதாக தொழில் தொடங்குவது, முதலீடு செய்தல், தொழில் செயல்பாடுகளை விரிவுப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசுடன் பல்வேறு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றன.

இதில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 12,082 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள தங்கள் எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை டாடா எலக்ட்ரானிக்ஸ்  விரிவுப்படுத்தவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது: பியூஷ் கோயல்

எடப்பாடி கலந்துகொள்ளும் எஸ்டிபிஐ மாநாடு: திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share