இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் உள்ளனர் என்று டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.762 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 8) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாடா குழும தலைவர் சந்திரசேகரன் பேசியபோது, “தொழில்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்னும் 10 வருடங்களில் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் நிச்சயமாக வரும். இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக திறமைசாலிகள் உள்ளனர்.

இன்னும் 30 வருடங்களில் இந்தியாவின் வளர்ச்சி 4 முதல் 5 மடங்கு இருக்கும். இதனால் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். புவிசார் அரசியல் மற்றும் தொழில்துறையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது. திறமை என்பது மிகவும் அவசியமாக உள்ளது. கல்லூரி படிப்பு மட்டும் அதற்கு போதுமானதல்ல. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு இயங்குகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
WTC Final: கேப்டனை அவுட்டாக்கிய கேப்டன்!
5 லட்சம் மரங்கள்: வேலு அறிவிப்பை செயல்படுத்திய ஸ்டாலின்