கிச்சன் கீர்த்தனா : சாமை பொங்கல்

தமிழகம்

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை சாமை அரிசிக்கு உண்டு. சாமையில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களைவிட அதிகம் என்பதால் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல உடல் வலிமையைத் தரும். இப்படிப்பட்ட சாமை அரிசியில் பொங்கல் செய்து தைத் திருநாளைக் கொண்டாடலாம்.

என்ன தேவை?

சாமை அரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – அரை இன்ச் நீளமுள்ளது (தட்டி வைக்கவும்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
தாளிக்க…
நெய் – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – முக்கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

அடுப்பில் சிறிய குக்கரை வைத்து நெய் விட்டு உருகியதும் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாக உடைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, கழுவிய சாமையைச் சேர்த்து கிளறவும்.

இத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு சூடானதும் குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். பிரஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து கலவையை மசித்துவிட்டு இறக்கி பரிமாறவும்.

பொங்கல் வைக்கப் போறீங்களா… இதோ உங்களுக்கான டிப்ஸ்!

கேழ்வரகு குக்கீஸ்

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *