கிச்சன் கீர்த்தனா : தேங்காய்ப் பாயசம்

தமிழகம்

மார்கழி கடைசி நாளன்று இன்று போகி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பழையன கழித்து புதியன புகுதல் வழக்கம்.

நாளை வரவிருக்கும் தைப் பொங்கலை வரவேற்புக்கும் விதமாக இன்று தேங்காய்ப் பாயசம் செய்து கொண்டாடுவோம்!

என்ன தேவை?

மெல்லிய நீளமாக நறுக்கிய தேங்காய் – முக்கால் கப்
பச்சரிசி – 3 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – முக்கால் கப் (தேவைக்கேற்ப சரிசெய்து கொள்ளவும்)
ஏலக்காய் – ஒன்று (தூளாக்கவும்)
முந்திரி – 10
காய்ச்சிய பால் – கால் கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மிக்ஸியில் தேங்காயோடு சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்டாக்கவும். அரைத்தவற்றோடு 2 கப் நீர் விட்டு கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

தீயை மிதமாக்கி 10 முதல் 12 நிமிடங்கள் வேகவிடவும். இடையிடையே கிளறிவிடவும். இல்லையென்றால் அடி பிடித்துக்கொள்ளும்.

அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து கால் கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை கலந்து கரையவிடவும். பிறகு வடிகட்டி கொள்ளவும். அதிகமாக தண்ணீர் விடாமல், குறைவாக விடவும். அரிசி வெந்து கஞ்சி பதத்துக்கு வந்ததும் வடிகட்டிய வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.

எல்லாம் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து நெய் விட்டு சூடானதும் முந்திரியை நன்கு வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். இறுதியாக பாலை விட்டு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

பச்சைப்பயறு பாயசம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *