கிச்சன் கீர்த்தனா : சாமை – நெல்லிக்காய்ப் புட்டு

சிறுதானியங்களில் ஒன்றான சாமையில் அரிசியைவிடப் பன்மடங்கு நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மற்ற சிறுதானியங்களைவிட சாமையில் இரும்புச்சத்து அதிகம். இது, ரத்தச் சோகையை நீக்க உதவும். மலச்சிக்கலைப் போக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். சாமையில் உள்ள தாது உப்புகள் உயிரணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். இப்படிப்பட்ட சாமையில், நெல்லிக்காய் சேர்த்து புட்டு செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?
வடித்த சாமை சாதம் – ஒரு கப்
நெல்லிக்காய் (சீவியது) – ஒரு கப்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க…
பொட்டுக்கடலை – கால் கப்
கசகசா – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்
தனியா – 2  டீஸ்பூன்

எப்படிச் செய்வது?
வறுத்து அரைக்கக் கொடுத்தவற்றை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக வறுத்து, அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். வடித்த சாமை சாதத்தில் துருவிய நெல்லிக்காய், வறுத்து அரைத்த பொடி, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு சாதத்தைச் சேர்த்து மெதுவாகக் கிளறி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால், சாமை – நெல்லிக்காய் புட்டு தயார்.

சாப்பிட்டதும் இனிப்பு சாப்பிடும் பழக்கம்… நல்லதா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts