மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசு 500 மதுக்கடைகளை மூட அரசாணை வெளியிட்டது.
இந்த அறிவிப்புப் படி தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் 22ஆம் தேதி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்து மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பியுள்ள அறிக்கையில், “மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியவர்கள் ஏற்கனவே மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
1.உதவி விற்பனையாளர்கள், 2.விற்பனையாளர்கள் மற்றும் 3.மேற்பார்வையாளர் உள்ள கடை ஊழியர்களின் மூப்புப் பட்டியலை, மாவட்ட மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள் மற்றும் டிப்போக்களில் உள்ள முக்கிய இடங்களில் அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும்.
கவுன்சிலிங் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் பணி ஒதுக்குதல் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
“சமூகநீதியும், சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கலைஞரின் இரு கண்கள்”-முதல்வர்!
குழந்தைகளுடன் ஆபத்தான பயணம்: தந்தை கைது!