கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடை விற்பனையாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கரூர் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடை விற்பனையாளரை நிரந்த பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுபான சில்லறை விற்பனைக் கடைப்பணியாளர்கள் மதுபானம் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையின்படியே விற்பனை செய்யப்பட வேண்டும்.
கூடுதல் விலை விற்பனை ஏதும் செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல் விலை விற்பனை ரூ.10 கண்டறியப்படும் பட்சத்தில் விற்பனை செய்த கடை விற்பனையாளர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார். மேலும் கூடுதல் விலை விற்பனை செய்வதை தடுக்க தவறிய சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மதுபான சில்லறை விற்பனைக் கடை மேற்பார்வையாளர்கள் கடையின் வேலை நேரம் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை ஆஜரில் இருக்க வேண்டும். கடையினை விட்டு வெளியே செல்லும் போது நகர்வுப் பதிவேட்டில் உரிய காரணத்தை பதிவிட்டுச் செல்ல வேண்டும்.
அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் கடையில் அதிக விற்பனையாகும் நேரமான மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டிப்பாக கடையில் இருக்க வேண்டும். அவ்வாறு, கடைப்பணியில் ஆஜரில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த மேற்பார்வையாளருக்கு, விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்படும். மேலும் இரண்டாவது முறை கடைப்பணியில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை ஆஜரில் இல்லாத பட்சத்தில் விற்பனை குறைவான கடைக்கு பணிமாறுதல் செய்ய முதுநிலை மண்டல மேலாளருக்கு பரிந்துரை செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
இந்தியா – இலங்கை இறுதிப்போட்டி: முழு விவரம் இதோ!
கொடநாடு பற்றி தனபால் பேசக்கூடாது : நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி