தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு 40 சதவிகிதம் போனஸ் வழங்குமாறு நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத் தலைவர் பெரியசாமி, பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர், “டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 26,000 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் கடந்த 19 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும் கிடையாது.
மதுபானங்கள் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் வரி வருவாய் கிடைக்கிறது.
கொரோனா காலத்தில்கூட ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 10 சதவிகிதம் போனஸ் மட்டுமே வழங்கப்பட்டது.
எனவே இந்த ஆண்டு போனஸ் வழங்குவதற்கான உச்சவரம்பை நீக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும். இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ராஜ்
ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: கி.வீரமணி எச்சரிக்கை!
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை!