இறுதிகட்டத்தில் இடைத்தேர்தல் : மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 27ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 25) மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலினும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியும் இறுதிநாள் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.

அதேபோல் நாதக, தேமுதிக கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இதற்கிடையே இன்று முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்னி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

வீதிவீதியாக இறுதிகட்ட பிரச்சாரம் : முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விபரம்!

ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் : விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா சர்மா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *