ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர், குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பொதுவாக ஜனவரி மாதத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 26ம் தேதி குடியரசு தினம், 30ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்கள் மதுவிற்பனையில்லா நாட்களாக அனுசரிக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடை, பார்களை பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிப்பர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் டாஸ்மாக் கடைகள் மூடல் தொடர்பாக இன்று (ஜனவரி 11) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், “வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் வருகிற 16-ந் தேதி திருவள்ளுவர் தினம், 26-ந் தேதி குடியரசு தினம் ஆகிய 2 நாட்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்!