tasmac case highcourt order

டாஸ்மாக் வழக்கு: வருமான வரித்துறை விளக்கமளிக்க உத்தரவு!

தமிழகம்

டாஸ்மாக் வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மூலம் கடந்த 2017 – 18ம் ஆண்டு 26,797 கோடி ரூபாய் வருமானம் கிடைத்த நிலையில், 2018 – 2019ம் ஆண்டு ரூ.31,157 கோடியாகவும், 2019 – 20ம் ஆண்டில் ரூ.33,133 கோடியாகவும் இருந்தது. இது 2020 – 2021ம் ஆண்டில் மொத்தமாக ரூ.33,811 கோடி ஆக உயர்ந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மார்ச் வரை மட்டும் ரூ.36,013 கோடி மதுபானம் மூலம் வருவாயாகக் கிடைத்துள்ளது என சட்டப்பேரவையில் அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை, கடந்த 2021-22 ஆம் நிதியாண்டிற்கு 7 ஆயிரத்து 986 கோடியே 34 லட்ச ரூபாய் வருமான வரி செலுத்தக் கூறி டாஸ்மாக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்தார்.

tasmac case highcourt order

மேலும், 2016 – 17 ஆம் நிதி ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து இதே போன்ற வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால்,

2021 – 22 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்வதாகவும், இரு நீதிபதிகள் அமர்வை அணுகுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்திருந்தது.

அந்த மேல்முறையீடு மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வருமான வரித் துறை தரப்பில் 2016 – 17 ஆம் ஆண்டில் மாநில அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் மதிப்புக் கூட்டு வரியாகச் செலுத்திய 14,000 கோடி ரூபாய் வரி விதிப்புக்கு உட்பட்டது என்றும், மாநில அரசு நிறுவனங்கள் சட்டப்படி வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதிப்புக் கூட்டு வரி செலுத்தியதற்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வருமானவரித் துறை நோட்டீசுக்கு இரண்டு வாரக் காலத்திற்குத் தடை விதித்தும்,

வழக்கு குறித்து வருமானவரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மோனிஷா

தூய்மை பணியாளருடன் உணவருந்திய முதல்வர்!

”அதிமுக காத்திருக்கட்டும்; அதுபற்றி பாஜகவிற்கு கவலை இல்லை” – நாராயணன் திருப்பதி

வேலுமணி வழக்கில் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *