கனமழை எதிரொலி காரணமாக தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 700 கிலோ மீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று (டிசம்பர் 7) இரவு 11.30 அளவில் புயலாக வலுப்பெற்றது.
தற்போது புயல் காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 200 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்தநிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 8) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் உதயநிதி… மூன்று துறைகள் இவைதான்!
ஐஎம்டிபி தரவரிசை: டாப் 10 நடிகர்கள் யார் யார்?