டார்கெட் நத்தம் விசுவநாதன்: நிலக்கரி இறக்குமதியில் விஜிலென்ஸ் ’பொறி’

தமிழகம்

நிலக்கரி இறக்குமதியில் ரூ.908 கோடி மோசடி தொடர்பாக மின்வாரிய பொறியாளர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக மின்சார வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்யும்போது கப்பலில் ஏற்றி இறக்குவதற்கான தொழிலாளர்கள் செலவு உள்ளிட்ட விவகாரத்தில் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து,

மின்வாரிய பொறியாளர்கள் முறைகேடாக கணக்கு காட்டி மோசடி செய்தனர் என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.

இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே அறப்போர் இயக்கம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தது.

அதன்பேரில் தொடர்ந்து விசாரணை செய்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மின்வாரிய பொறியாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் இன்று (மார்ச் 3) விடுத்துள்ள பத்திரிகை செய்தியில்,

”சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும் மின்சார வாரிய நிர்வாகமும் கூட்டு சதி செய்து மகாநதி நிலக்கரி சுரங்கம் மற்றும் ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கத்திலிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவந்த ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட்,

துறைமுகத்தில் வரியாக கட்டிய பணத்தின் உண்மையான பில்களை சமர்ப்பிர்க்காமல் போலியாக அதைவிட பல மடங்கு பணத்தை பெற்று மோசடி ஊழல் செய்தனர்.

இதில் 2011 முதல் 2016 வரை 1028 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 ஆம் ஆண்டு சமர்ப்பித்து இருந்தது.

இதன் மீது விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை 2011 முதல் 2016 வரை 908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது ஊர்ஜிதம் ஆகியுள்ளது என்று கூறி,

இதற்கு காரணமான முன்னாள் தலைமை பொறியாளர்கள் கண்காணிப்பு பொறியாளர்கள் செயற்பொறியாளர்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மொத்தம் 10 பேர் மீது கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று எஃப்.ஐ.ஆர். பதிந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை இதன் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2011-16, 16-21 என தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்போது மின்சாரத்துறை அமைச்சர்களாக முதல் ஆட்சியில் நத்தம் விஸ்வநாதன், இரண்டாம் ஆட்சியில் தங்கமணி ஆகியோர் பதவி வகித்தனர்.

இப்போது பொறியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் மூலம் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், தற்போதைய அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான நத்தம் விசுவநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

மனைவியை மணந்த காதலன்: பழிவாங்கிய கணவன்

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

tangedco engineers are booked case
+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *