டான்செட், சீட்டா தேர்வு: ஹால் டிக்கெட் பெறுவது எப்படி?

தமிழகம்

2023ஆம் ஆண்டுக்கான டான்செட் மற்றும் சீட்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் (மார்ச் 11) பெற்றுக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு எனப்படும் டான்செட் (TANCET) தேர்வினை எழுத வேண்டும்.

அதேபோன்று முதுகலை பொறியியல் படிப்புகளான, முதுகலை தொழில்நுட்பம், முதுகலை கட்டிடவியல் மற்றும் முதுகலை திட்டமிடல் (M.E. M.TECH., M.ARCH., M.PLAN) படிப்புகளில் சேருவதற்கு நடப்பாண்டு முதல் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு எனப்படும் சீட்டா(CEETA) தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் வரும் 2023ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25ம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 26ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 1ம் தேதி தொடங்கியது. அதற்கான கால அவகாசம் பிப்ரவரி 22ம் தேதி என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுவரை எம்பிஏ படிப்புக்கான தேர்வை எழுத 24,468 பேரும், எம்சிஏ படிப்புக்கான தேர்வை எழுத 9,820 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதேபோன்று சீட்டா தேர்வுக்கு மொத்தம் 4,961 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் டான்செட் மற்றும் சீட்டா தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைகழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை நாளை காலை 11 மணி முதல் https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணைப்பை க்ளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜப்பான் பெண்ணுக்கு டார்ச்சரா? மகளிர் ஆணையம் உத்தரவு!

ஓயோ நிறுவனரின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.