டான்செட், சீட்டா தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Selvam

தமிழ்நாட்டில் டான்செட், சீட்டா தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர வேண்டுமானால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதே போன்று எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்பிளான் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர கடந்த ஆண்டு முதல் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA) என்ற புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.

அதன்படி 2024- 2025-ம் கல்வியாண்டுக்கான எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்பில் சேர டான்செட் தேர்வு நடைபெற உள்ளது. மேலும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர சீட்டா பிஜி நுழைவுத் தேர்வும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு (2024) நடைபெறும் டான்செட் மற்றும் சீட்டா ஆகிய தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டான்செட் மற்றும் சீட்டா ஆகிய தேர்வுகளுக்கு இந்த ஆண்டு வரும் மார்ச் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

எனவே விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதளத்தில் ஜனவரி 10-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து விரிவான தகவல்கள் இன்று (ஜனவரி 7) வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: இந்த சீசனுக்கு எந்தெந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்?

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share