முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் தேர்வு முடிவுகள் நாளை(ஏப்ரல் 13) வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (டான்செட் ) நடத்தப்படுகிறது.
இதேபோல, எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர நடப்பாண்டு முதல் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு(சீட்டா) என்ற புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.
அதன்படி, 2023-ம் ஆண்டு டான்செட், சீட்டா தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த பிப்ரவரியில் வெளியானது. இதையடுத்து டான்செட் தேர்வு தமிழகம் முழுவதும் 40 தேர்வு மையங்களில் மார்ச் 25ம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 26ம் தேதியும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சுமார் 36 ஆயிரம் பேர் எழுதிய டான்செட், சீட்டா தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஏப்ரல் 13) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை www.tancet.annauniv.edu இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மதிப்பெண் அட்டையை வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை மாணவர்கள் பெற்றுக்கொள்ளவும் அண்ணா பல்கலை. அறிவுறுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாகுபலி, கேஜிஎஃப் வரிசையில் ”சூர்யா 42” தலைப்பு!
‘ருத்ரன்’ ரிலீஸ் விவகாரம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!