தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக மியான்மருக்கு தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டு இன்று (அக்டோபர் 12) சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் அதிக சம்பளத்துக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் குறிவைக்கப்பட்டு, மியான்மர் நாட்டில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அங்கு சட்ட விரோத வேலைகளை செய்யக்கூறி துன்புறுத்தப்பட்ட அவர்களை மீட்க, நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், முதற்கட்டமாக மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் கடந்த வாரம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி நிறுவனத்தின் முகவர்களான ஹானவாஸ், முபாரக் அலி ஆகியோர் இன்று (அக்டோபர் 12) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
5 நாட்களுக்குக் கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
முதன்முறையாக தேவாங்கு சரணாலயம்: தமிழக அரசு உத்தரவு!