tamilnadu weatherman update on Chennai rain

சென்னையில் மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

தமிழகம்

சென்னையில் இன்று (டிசம்பர் 15) மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 15) மழை பெய்யும்; ஆனால் அதைப் பற்றி பயப்பட வேண்டாம். அது மிதமான மழையாக இருக்கும்.

மேலும், டிசம்பர் 18 முதல் 22 வரை பெய்யும் மழையானது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால், தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் அதிகளவு மழைக்கு வாய்ப்புள்ளது’ என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ‘கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிசம்பர் 15-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘டிசம்பர் 16-ல் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: சருமத்துக்கு முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவது சரியானதா? 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *