அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய கடற்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தது.
இந்நிலையில், இன்று (மார்ச் 19 ) மற்றும் மார்ச் 20 , 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
மார்ச் 22 மற்றும் 23 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”ஸ்டாலின் முதல்வராக காரணமே நான் தான்” சீமான் அதிரடி!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி மட்டுமே போட்டி!