தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. விழுப்புரத்தில் 8 செ.மீ., நீலகிரியில் 5 செ.மீ., திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூரில் 1 செ.மீ. அளவு மழைப் பதிவானது.
சென்னையின் பல பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் வேளச்சேரி, கிண்டி, தாம்பரம் போன்ற இடங்களில் ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் வெப்பம் சற்று குறைந்தது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் தஞ்சாவூரில் 38° செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 20.6° செல்சியஸும் பதிவானது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(அக்டோபர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில்
” 04.10.2024: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
05.10.2024: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்
04.10.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
04.10.2024: வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Womens T20 World Cup : 16 தோல்விகளுக்கு பின் வங்கதேசம் வெற்றி!
சனாதனம் : பவன் கல்யாணின் எச்சரிக்கை… உதயநிதி பதில்!
திருப்பதி லட்டு விவகாரம் : ’சிறப்பு புலனாய்வுக் குழு’ அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!