பொது இடங்களில் முகக்கவசம்: தமிழ்நாடு அரசின் நிலை என்ன?

Published On:

| By Minnambalam

கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில்  இன்றுடன் பொது விடுமுறை முடிவடையும் நிலையில் தமிழ்நாடு அரசும் இப்படிப்பட்ட உத்தரவைப் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் மீண்டும் கொரொனோ தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் திரையரங்குகள், கடைகளில் சானிடைசைர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் நேற்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொங்கல் விடுமுறையையொட்டி தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் ஒன்று சேர்ந்ததால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

கேரளாவைப் பொறுத்தவரை சபரிமலை சீசன் இந்த வாரத்தில் முடிவடைகிறது.

அதற்காக காத்திருந்து இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் இன்றுடன் பொங்கல் விடுமுறை முடிவடைவதால், சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள மக்கள் பணியிடங்களுக்குத் திரும்பியதும் தமிழ்நாடு அரசும் கொரோனா கட்டுப்பாடு அறிவிப்புகளை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது வழக்கு –  536 வாகனங்கள் பறிமுதல்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share