தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பனீந்திர ரெட்டி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், சென்னை சிவில் சப்ளை காவல்துறை இயக்குனர் ஜெனரலாக இருந்த ஆபாஷ்குமார் ஐ.பி.எஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, சென்னை சிவில் பாதுகாப்பு மற்றும் ஹோம்கார்டு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கூடுதல் டிஜிபியாக இருந்த ஜி.வெங்கட்ராமன், சென்னை ஏடிஜிபி நிர்வாக பிரிவில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
என்.இசட்.ஆசியம்மாள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், டி.செந்தில்குமார் சென்னை டிஜிபி அலுவலக டிஜிபியாகவும், எஸ்.பிரபாகரன் சென்னை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐஜியாகவும், எம்.எஸ்.முத்துச்சாமி வேலூர் மாவட்ட டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடலோர பாதுகாப்பு டிஐஜியாக ஏ.கயல்விழி, சென்னை தொழில்நுட்ப சேவைத்துறை டிஐஜியாக டாக்டர் ஆர்.சின்னச்சாமி, சென்னை நீதிமன்ற பாதுகாப்பு துணை கமிஷனராக எம்.ராஜராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட எஸ்பியாக டாக்டர் கே.பிரபாகர், தர்மபுரி மாவட்ட எஸ்பியாக என்.ஸ்டீபன் ஜேசுபாதம், சேலம் எஸ்பியாக டாக்டர் ஆர்.சிவக்குமார், தஞ்சாவூர் எஸ்பியாக ஜெ.முத்தரசி, சென்னை சிஐடி குற்றப்பிரிவு எஸ்பியாக ரவளிபிரியா, போக்குவரத்து துணை கமிஷனராக ஏ.ஜெயலட்சுமி, சென்னை சட்டம் ஒழுங்கு டிஐஜியாக இ.எஸ்.உமா, நாமக்கல் எஸ்பியாக சி.கலைச்செல்வன், சென்னை சிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக அற அருள் அரசு, தென்காசி எஸ்பியாக எஸ்.ஆர்.செந்தில் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
குடிநீர் தொட்டியில் மலம்: தனிப்படை அமைப்பு!
செங்கல்பட்டில் தாவரவியல் பூங்கா: தமிழக அரசு அறிவிப்பு!