போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?

Published On:

| By Kavi

tamilnadu transport workers strike

ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். tamilnadu transport workers strike

இந்தநிலையில் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் அரசுத் தரப்பில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சிஐடியூ, ஏஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 30 தொழிற்சங்க நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

இதில் உடன்பாடு எட்டப்படாததால் ஜனவரி 9ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கியிருக்கும் நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அதனால் முன்கூட்டியே சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

இந்தநிலையில், இன்று (ஜனவரி 4) கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையாக நிறைவேற்றியிருக்கிறோம்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கோரிக்கை மட்டும் நிலுவையில் இருக்கிறது. தற்போதுள்ள நிதி நிலைமை அனைவரும் அறிந்தது.

பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது. பொங்கலுக்கு பிறகு  போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவதிலும் எந்த பிரச்சினையும் இருக்காது. மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல்  பயணிக்கலாம். எந்த விதத்திலும் போக்குவரத்துக்கு தடை இருக்காது”என்றார்.

இந்தநிலையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் இந்த விடியா அரசு தட்டி கழிக்கிறது.

2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதி எண். 152-ன்படி, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்றும், ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் மேடைதோறும் பேசி,

பின்புற வாசல் வழியே ஆட்சியைப் பிடித்த விடியா திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று பாதி ஆயுளை தாண்டிவிட்ட நிலையில்,

எப்போதும்போல் முந்தைய அரசின் மீது வீண் பழிபோட்டுத் தப்பிக்காமல், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி,

பொதுமக்கள் பண்டிகை காலங்களில் எந்தவிதமான சிரமமுமின்றி தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சொத்து வழிகாட்டு மதிப்பீடு: அரசின் சுற்றறிக்கை ரத்து!

வெள்ள நிவாரணம் எங்க கிடைக்குது?: நிர்மலாவிடம் கேள்வி கேட்ட பெண்!

tamilnadu transport workers strike

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share