நள்ளிரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
அரசுடன் ஏற்கனவே இருமுறை நடந்த பேச்சுவார்த்தை, இன்று (ஜனவரி 8) நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை என அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில், “இன்று இரவு 11.59 மணி வரைதான் பேருந்துகள் இயக்கப்படும். நள்ளிரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது. நீண்டதூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தப்படும்” என்று சிஐடியு சங்க தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
“தொமுச உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை வைத்து சில பேருந்துகளை இயக்கி படம் காட்டுவார்கள். இது பிரச்சினையைத் தீவிரமாக்குமே தவிர, தீர்வுக்கு வராது” என்றும் கூறினார்.
இந்தச்சூழலில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் இன்றே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் திருவான்மியூர் பணிமனையிலிருந்து பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஈரோட்டிலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ஸ்டிரைக் – போக்குவரத்து தொழிற்சங்கங்கள்!
”திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி”: ராகுல்காந்தி