தமிழக அளவில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் நாளை மறியல் போராட்டம்!

Published On:

| By christopher

தமிழகம் தழுவிய அளவில் நாளை (ஆகஸ்ட் 27) போக்குவரத்து ஓய்வூதியர்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நலஅமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன்,  ”போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை.

இது தொடர்பானவற்றுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஆகஸ்ட்16 முதல் வீடுதோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தோம்.

இதன் தொடர்ச்சியாக நாளை (ஆகஸ்ட் 27) தமிழகம் தழுவிய அளவில் ஓன்பது இடங்களில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதன் பகுதியாக சென்னை, பல்லவன் இல்லம் அருகே மறியல் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: தேன் தடவினால் முடி செழிக்கும்!

டாப் 10 நியூஸ் : கிருஷ்ண ஜெயந்தி முதல் தமிழ்த்தென்றல் திரு.வி.க பிறந்த நாள் வரை!

வெற்றிக் கழகமா? வெற்றுக் கழகமா? அரசியல் கட்சி என்றால்தான் என்ன?

கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் சிக்கி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share