வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்!

தமிழகம்

நுரையீரல் தொற்று நோய் காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் இன்று (செப்டம்பர் 10) காலமானார். அவருக்கு வயது 76.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருந்தவர், வெள்ளையன். நுரையீரல் தொற்று நோய் காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் நேற்று (செப்டம்பர் 9) அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளையன் இன்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நிலவில் அணு மின் நிலையம் … ரஷ்யாவுடன் சீனா, இந்தியா கைகோர்ப்பு!

விசிக மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு : உதயநிதி ரியாக்‌ஷன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *