தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.1, 734.54 கோடி அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில்,
“கடந்த 2022 -2023-ஆம் ஆண்டில் டாஸ்மாக்கில் ரூ. 44,121.13 கோடி விற்பனை செய்யப்பட்டது. 2023 – 2024-ஆம் ஆண்டில் ரூ.45,855.67 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எரி சாராய கடத்தல், போலி மதுபானம் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 101 அமலாக்கப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
போலி மதுபான கடத்தலை தடுக்க மாநிலம் முழுவதும் 45 மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
2023 – 24-ஆம் ஆண்டில் எரிசாராய கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 12, 431 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 12, 422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4.64 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளது.
மெத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகள், உரிமம் பெற்ற ஆலைகளை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளச்சாராய மரணம்: கலெக்டர்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை!
விஜய் ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்… ‘கோட்’ இரண்டாவது சிங்கிள் அப்டேட்!