தமிழக வரலாற்றில் முதன்முறையாக, நேற்று (ஏப்ரல் 20) மின் நுகர்வு அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
அனலை கக்கும் கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் பொதுவாக பொதுமக்களிடையே மின் நுகர்வு அதிகமாக இருக்கும்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மின்நுகர்வு அதிகரித்து உச்சகட்டத்தை எட்டி வருகிறது.
இதுகுறித்து ஒவ்வொரு நாளும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக செந்தில்பாலாஜி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வரலாற்றில் முதன்முறையாக, நேற்று (20/04/2023) தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு ஏப்ரல் 19ஆம் தேதியன்று 41.82 கோடி யூனிட்கள் ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மெகாவாட் அளவில், நேற்று 20/04/2023 மாநிலத்தின் மின் நுகர்வு தேவை 19,387 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை ஏப்ரல் 19ஆம் தேதியன்று 19,087 மெகா வாட் ஆகும்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதனை “ஒளிரும் தமிழ்நாடு.. மிளிரும் மின்துறை..” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
ஸ்டாலின் டூ விஜய்: ப்ளூ டிக் நீக்கி ட்விட்டர் கொடுத்த அதிர்ச்சி!