கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ள சூழலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும் (ஆகஸ்ட் 10) நாளையும் (ஆகஸ்ட் 11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி,
பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
இருப்பினும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.
முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில்,
‘கோமுகி அணை 7 செ.மீ., சித்தம்பட்டி 6 செ.மீ., தனிமங்கலம், கும்பகோணம், காட்டுமயிலூர், மேலூர், மேட்டுப்பட்டி, தல்லாகுளம்,
கொடைக்கானல் பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும் கமுதி, கிழாநிலை, சிங்கம்புனரி, உளுந்தூர்பேட்டை, வம்பன், திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ.,
தேவக்கோட்டை, மதுரை தெற்கு, பார்வூட், திருவிடைமருதூர், திருமயம், கல்லிக்குடி, மஞ்சளாறு, சத்தியார், தொண்டி, இடையபட்டி,
பில்லிமலை எஸ்டேட், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று,
மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்று (ஆகஸ்ட் 10) மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு!
கிச்சன் கீர்த்தனா: சென்னா ரைஸ்