மானிய கோரிக்கையை விமர்சித்த காவலர்கள் பணியிடை நீக்கம்!

தமிழகம்

காவல்துறை மீதான மானிய கோரிக்கையை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட காவலர்கள் பாலமுருகன் மற்றும் கோபிகண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 21) காவல்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார்.

இதில் காவலர் நலன் சார்ந்த திட்டங்கள், காலி பணியிடங்களை நிரப்புவது, தமிழகத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் ஆகியவை குறித்துப் பேசினார்.

இதனை விமர்சிக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் பாலமுருகன் என்பவர் நேற்று மாலை வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜூவால், சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து மற்றும் வீடியோவை பரப்பியதற்காக, தேனாம்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் , தற்போது போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் கோபிகண்ணன் காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து முகநூலில் வீடியோ வெளியிட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இதுவரை 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

12 மணி நேர வேலைச் சட்டம்: தனி மனித வாழ்க்கையில் ஆடும் ஆட்டம்!

“ஸ்டாலினுக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் நன்றி மாநாடு”: இனிகோ இருதயராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *