பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் 94.56 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை இன்று (மே 6) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22 வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 7,60,606 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
தேர்வுகள் முடிந்ததையடுத்து விடைத்தாள் திருத்தும் பணியானது 83 மையங்களில் ஏப்ரல் 1 முதல் 13 வரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மதிப்பெண் சரிபார்த்தல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் 7,19,196 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.56%, மாணவியர் – 3,99,890 ( (96.44%) மாணவர்கள் – 3,25,305 (92.37%) , மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?
அமேதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் தாக்குதல்: போலீஸ் குவிப்பு!