தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது.
நவம்பர் மாத துவக்கத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
டிசம்பர் மாதத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் மழைப்பொழிவு குறைவாகவே அமைந்தது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனால் அதிகாலையில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. கடந்த 5-ஆம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
அந்தவகையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
வேலைவாய்ப்பு : சென்னை மாநகராட்சியில் பணி!
அமைச்சருடனான பேச்சு வார்த்தை தோல்வி: தொடரும் செவிலியர்கள் போராட்டம்!