tamilnadu Legislature Event live case

சட்டமன்ற நிகழ்வு – முழுமையாக நேரலை செய்வதில் என்ன பிரச்சினை?: ஐகோர்ட் கேள்வி!

தமிழகம்

tamilnadu Legislature Event live case

தமிழகச் சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது.

இன்று (ஜனவரி 23) விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த் மரணமடைந்த விவரம் குறித்து வழக்கறிஞர் வி.டி.பாலாஜி நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

விஜயகாந்த் தரப்பில் அவரது சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கைத் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், “சட்டமன்றத்தில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரை, பட்ஜெட் உரை, அமைச்சர்களின் பதிலுரைகள் ஆகியவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதால், பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது” என வாதிட்டார்.

மனுதாரர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பவில்லை என்றும், தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நேரலையாக ஒளிபரப்ப வேண்டுமென வலியுறுத்துவதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் போது, தமிழகச் சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை? என்று கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அரசு தரப்பு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு!

ராமர், அனுமான், இராமாயணம் : தற்கால சினிமாவின் கச்சாப்பொருளா?

அயோத்தியில் மக்கள் கடல்!

கேலோ இந்தியா 2024: தங்கப் பதக்கத்தை வேட்டையாடும் தமிழக வீரர்கள்

tamilnadu Legislature Event live case

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *