தமிழ்நாட்டில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும், 6 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உள்துறை இன்று (மார்ச் 30) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவி உயர்வு
வேலூர் காவல் ஆட்சேர்ப்பு பள்ளி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.அசோக்குமார், வேலூர் மாவட்ட சேவூர் XV பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் எஸ்.பி.யாகவும்,
செங்கல்பட்டு மாவட்ட குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு, சென்னை ரயில்வே எஸ்.பி.யாகவும்,
அரியலூர் மாவட்ட குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.ரவிசேகரன், டிஜிபி தலைமையகத்தில் எஸ்.பி.யாகவும், (ஏஐஜி) திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.எம்.பி. ஆசைத்தம்பி, திருப்பூர் நகர எஸ்.பி.யாகவும்,
ராணிப்பேட்டை குற்றப்பிரிவு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி. முத்துக்கருப்பன், பழனி XIV பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை எஸ்.பி.யாகவும்,
ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.ஜானகிராம், ஆவடி படைப்பிரிவின் எஸ்.பி.யாகவும்,
நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். சந்திரமெளலி, சென்னை காவல் பயிற்சி மைய எஸ்.பி.யாகபும்,
பழனி தமிழ்நாடு போலீஸ் XIV பட்டாலியன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.மங்கலேஸ்வரன், வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குணசேகரன், தர்மபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.அண்ணாமலை,
நீலகிரி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ்,
திருவண்ணாமலை குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பராஜ்,
ஆவடி காவல் ஆணையரக, கூடுதல் துணை காவல் ஆணையர் கங்கைராஜ் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம்
மதுரை நகர துணை காவல் ஆணையர் கவுதம் கோயல், சேலம் காவல் துறை துணை ஆணையராகவும்,
வேலூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ்-XV பட்டாலியன் எஸ்.பி.யான எம்.சந்திரசேகரன், சென்னை கடலோர அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நுண்ணறிவு பிரிவு-II காவல் துறை துணை ஆணையர் எஸ்.சக்திவேல், கொளத்தூர் காவல் துணை ஆணையராகவும்,
நிர்வாகத் துறை துணை காவல் ஆணையரான எம்.ராமமூர்த்தி, சென்னை நுண்ணறிவு பிரிவு-II காவல் துணை ஆணையராகவும்,
பழனி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் XIV பட்டாலியன் காவல் கண்காணிப்பாளர் எஸ்.அய்யாசாமி, பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ், XIII பட்டாலியன் படைத்தலைவராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, மத்திய குற்றப்பிரிவு -II துணை ஆணையர் கே.மீனா, அதே பதவியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
பிரியா
“நட்பு” திருச்சி சிவாவுடன் குஷ்பூ செல்ஃபி!
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை: கே.என்.நேரு விளக்கம்!