பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்திற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியைத் தமிழக அரசு கோரியுள்ளது.
சென்னையை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காகத் தமிழக அரசு 13 கிராமங்களில் இருந்து விவசாய நிலங்களைக் கையகப்படுத்த உள்ளது.
இதற்கு பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை இன்று (டிசம்பர் 5) தமிழ்நாடு இண்டஸ்டிரியல் டெவலப்மெண்ட கார்ப்பரேஷன் – டிட்கோ அறிவித்துள்ளது.
இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க டிட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் டிட்கோ அறிவித்துள்ளது.
ஜனவரி 6 ஆம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள டிட்கோ தலைமை அலுவலகத்தில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் – சென்னை விமான நிலையம் இடையே சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை ஆராய வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.
மோனிஷா
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை!
சேலம் புத்தகத் திருவிழா: ரூ.3.75 கோடிக்கு விற்பனை!